ஓடுவது

சில வருடம் முன் நானும் என் நண்பன் லக்ஷ்மி நாராயணனும் Tom Hanks நடித்த Forrest Gump திரைப் படத்தைப் பார்த்தோம். நான் பிறப்பதற்கு முந்தின வருடம் வெளியான திரைப்படம். முழுக்க முழுக்க அமெரிக்கத்தனமான படம் என்று தோன்றியது இருந்தாலும் எங்களுக்கும் டாம் ஹாங்க்ஸை  பிடித்துப்போனது. படம் முழுக்க அவர் ஓடிக்கொண்டே இருப்பார்.  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது நல்ல கலைப்படமா என்பது பற்றி இல்லை. அவர் கதாபாத்திரத்தின் கல்லமின்மையும் அவன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நா…

1812

1812ஆம் ஆண்டு ஜூன் மாதம் நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தார். பிரேஷ்ய, ஆஸ்திரியா, பிரஞ்சு நாடுகளை சேர்ந்த ஆறு லட்சத்திற்கும் மேல் போர் வீரர்கள், ஐம்பதாயிரம் போர் குதிரைகள், ஆயிரத்திற்கும் மேல் பீரங்கிகள், குதிரை வண்டிகள் அடங்கிய ‘தி கிரேட் ஆர்மீ’ நெப்போலியன் தலைமையில் ஒன்று திரண்டது. ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப்பெரிய படையெடுப்பாக இது கருதப்படுகிறது. தன்னுடைய படைகளை சில பிரிவுகளாக பிரித்து தேவையானபோது இணைத்து போர் செய்வது நெப்போலியனின் போர் உத்தி. அது வெற்றிகரமான போர் முறையாகவும் இருந்துள்ளது. ஆ…

திருமங்கை மன்னன் வடிவழகு

திருமங்கை மன்னன், குமுதவல்லி நாச்சியார்- திருநகரி திருக்குறுங்குடியில் சுதா மாமி ஸ்ரீனிவாசன் மாமா வசித்தபோது அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தேன். காலையில் எழுந்தவுடன் குளித்து நம்பி கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரும்பி வந்தவுடன் சாப்பிட்டு மாமாவுடைய காரில் அருகிலிருக்கும் திருவட்டாறு தென்காசி மணிமுத்தாறு அணை நாங்குநேரி பேச்சிப்பாறை அணை என்று ஊர்சுற்றி வருவோம். திருக்குறுங்குடி மலைகள் சூழ்ந்த ஊர். காற்று மலைகளில் அறைந்து வந்து மோதும். மலை தன் இரு உள்ளங்கைகளில் நீரை ஏந்தியிருப்பது…

சரஸ்வதி ராம்நாத் ஆவணப்படம்

சரஸ்வதி ராம்நாத் சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்பில் கோதானம் நாவல் வாசித்திருக்கிறேன். வாசிக்கும் போது மொழிபெயர்ப்பு  பற்றியெல்லாம் கவனம் இல்லாத வாசிப்பு காலம். நூலை கைகளில் எடுத்தவுடன் நேரே கதையை ஆரம்பித்து வாசிக்கும் பழக்கம். அவருடைய மொழிபெயர்ப்பு நாவல்கள் முழுவதையும்  வாசிக்க வேண்டும். சென்ற ஆண்டு (செப்டம்பர் 7, 1925 ) சரஸ்வதி ராம்நாத்துக்கு நூற்றாண்டு நிறைவு. வாழ்க்கையில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆளுமைகளில் ஒருவர். எழுத்தாளர் பாவண்ணன் அவரை பற்றித் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந…

காஞ்சி மாநகர்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- திருவெஃகா காஞ்சிபுரம் என்னுடைய பூர்வீக ஊர். என்னுடைய முன்னோர்கள் காஞ்சியிலும் மகாபலிபுரத்திலும் வாழ்ந்துள்ளனர். காஞ்சி திருவெஃகா (யதோக்தகாரி பெருமாள்) கோவிலில் எங்கள் குடும்பத்திற்கு பல கைங்கர்ய முறைகள் இருந்துள்ளன. கடைசியாக அப்பாவுடைய அப்பா பெருமாளின் திருவாபரணங்களை பாதுகாத்து உற்சவ காலங்களில் அலங்காரத்திற்கான  ஆபரணங்களை எடுத்தளிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்.  மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோவிலில் இப்போதும் தீர்த்த முறையும் முதல் மரியாதையும் எங்கள் வம்சத்தை…

வரவிருக்கும் பொற்காலம்

நூறு வருடத்திற்கும் மேலான நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அரசாங்கத்திடமிருந்தோ இந்திய இலக்கிய அமைப்புகளிலிருந்தோ உரிய நேரத்தில் உரிய விதத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரமோ விருதோ கிடைத்ததில்லை. இந்த நிலை நவீன தமிழ் இலக்கியத்தின் முதல் முன்னோடியான புதுமைப்பித்தனின் காலம் முதலே இவ்வாறு தான் இருந்து வந்திருக்கிறது. இதற்கு நேர்மாறான கேளிக்கை, அரசியல் இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் விருதுகளும் அங்கீகாரங்களும் கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறது நம் அரசு.

ஆன்ம சுகம்

(விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள தெய்வ தசகம் நூலுக்கு எழுதிய முன்னுரை) குருகு இதழைத் துவங்கும்போதே நாராயண குருவின் தத்துவப் பள்ளியைச் சேர்ந்த எழுத்துக்கள் இதழில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று நினைத்திருந்தோம். இன்றைய நவீன உலகிற்கு நாராயண குரு அளவிற்குப் பொருந்தக்கூடிய ஞான ஆசிரியர்கள் வெகுசிலரே. ஆசிரியர் என்பவர் உடலுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு நிகழ்வு, தொடர்ந்து அடுத்தவர்களில் திகழ்ந்துகொண்டிருப்பவர். நாராயண குரு தான் நடராஜ குருவாக இருந்து குரு நித்ய சைதன்ய யதி ஆகிறார். …

அனங்கன்